நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனையின்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் பகல் நேரத்தில் வெப்ப சுட்டெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதன்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான (Heat Index) சில இடங்களில் ‘(Caution level)’ – எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிகளவு நீர் அருந்தி நீரேற்றத்துடன் இருக்கவும் முடிந்தவரை நேரடி சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும், பகலின் அதிக வெப்பமான நேரங்களில் கடினமான வெளி வேலைகளை குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








