இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது இரு தரப்பினரினால் விதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை அகற்றும் வேலை திட்டங்களுக்காக பல நிறுவனங்கள் காணப்படுகின்றன.

இருந்த போதும் குறிப்பிடத்தக்க ஒரு சில கன்னிவெடிகளை அகற்றும் நிறுவனமான டயஸ் நிறுவனமானது மனித வலுவை கொண்டு செயற்பட்டு வருகிறது.

இவ் நிறுவனத்துக்கு நிதி பங்களிப்பு செய்து வரும் நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் உயர் அதிகாரிகாரி அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கு உதவி வழங்குதல் ,பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசகர் கடோ அகிகோ மற்றும் ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிக செயலகத்தின் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை மற்றும் பூனகரி கேரதீவு பிரதேச பகுதியில் கன்னிவெடிகளை அகற்றி முடித்த பிரதேசங்களுக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here