இந்தியா பயணம் குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளதையடுத்து மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், போன்ற இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தன் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இடம்பெறும் குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக அங்கு சுற்றுலா செல்லும் அமெரிக்க பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம், மேகாலயா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்குச் செல்வதற்கு முன் அமெரிக்க அரசு ஊழியர்கள் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here