ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அங்கு விஜயம்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (30) ஜப்பான் பேரரசர் நருஹிதோவை அவரது மாளிகையில் சந்தித்தார்.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அமைந்துள்ள பேரரசர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதியை பேரரசர் உவகையுடன் வரவேற்றார்.

இருவரும் நட்புறவு மற்றும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here