ஜனாதிபதி ஊடகப்பிரிவு
உள்நாட்டுச்செய்திகள்
ஜப்பான் பேரரசரை சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அங்கு விஜயம்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (30) ஜப்பான் பேரரசர் நருஹிதோவை அவரது மாளிகையில் சந்தித்தார்.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அமைந்துள்ள பேரரசர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதியை பேரரசர் உவகையுடன் வரவேற்றார்.
இருவரும் நட்புறவு மற்றும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல்களில்...
Top
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மாலைதீவுக்குப் பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன் இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை...
புதிய செய்திகள்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்க புதிய குழு நியமிப்பு!
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொடர்புடைய தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்...
உள்நாட்டுச்செய்திகள்
இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றி சட்டத்தை மீறும் இ.போ.ச!
பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொத்மலை - கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த...
புதிய செய்திகள்
நாட்டில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
நாட்டில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படவுள்ளது.
இதற்கான கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வீதிப் பயன்பாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு...
புதிய செய்திகள்
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்!
நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் வாங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சில நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காகப் பெற்ற கடன்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதால் இது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காக...
Top
சபை முதல்வராக நியமிக்கப்பட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க..!
ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சபாநாயகராக சிரேஷ்ட உறுப்பினர் நிஹால் கலபத்தியை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இவர்கள் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உள்நாட்டுச்செய்திகள்
திறைசேரிக்கு அனுப்பப்பட்ட சீன அரசினால் வழங்கப்பட்ட 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி…!
இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீன அரசினால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்பட்ட சேதங்களுக்காக இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி...
உள்நாட்டுச்செய்திகள்
ஜனாதிபதிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


