யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவையின் மாதாந்த ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 319 வது வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர், முன்னாள் அதிபருமான ஆ.சிவநாதன் தலைமையில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் இடம் பெற்றது.

காலை 10.45 தொடக்கம் 11.45 மணி  வரை இடம் பெற்ற நிகழ்வில் வெளியீட்டுரையினையினை  செல்வி தயாளினி குமாரசாமி அவர்களும், மதிப்பீட்டுரையினை  திருமதி. சசிலேகா ஜெயராஜன் அவர்களும் ஆற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன.

இதில் உதவித் திட்டங்களாக, யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையின் உதைபந்தாட்டம், மற்றும் கரப்பந்தாட்டம்  அணியினருக்கான சீருடை கள், கரப்பந்தாட்டப் பந்துகள் கொள்வனவுக்காக ரூபா150,000 நிதி பாடசாலை சமூகத்திடம் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இவ் உதவித் திட்டத்தை ஆச்சிரம  முதல்வர் கலாநிதி மோகனதாஸ்  சுவாமிகள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் காலநிதி மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here