வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி  தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை  4/8/2024 திகதி  ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதில் முக்கிய  8 ஆம் திகதி வியாழக்கிழமையும்,  காலை 8  மணிக்கு      ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு சதுர்த்தி விநாயகப் பெருமானுடன் முருகப் பெருமானும் எழுந்தருள்வார்கள். 10 ஆம் திருவிழாவான பூங்காவன உற்சவமும்,  13 ஆம் திகதி செவ்வாய்கிழமை பகல் 9 மணிக்கு இடம்பெறும்.

11 ஆம் திருவிழாவான கைலாச வாகன உற்சவமும், 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.

14ம் திருவிழாவான சப்பறத் திருவிழா 17ம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கும், 15ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கும், 16ம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா 19ம் திகதி திங்கட் கிழமை காலை 8 மணிக்கும் நடைபெறும்.

தீர்த்தத்திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு மௌனத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும் மறுநாள் 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 6.30 மணியளவில் தொண்டர் பூசை நடைபெறும். மகோற்சவ தினங்களில் சந்நிதி சுற்றாடலில் அமைந்துள்ள அன்னதான மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here