இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான (NIC) தரவுகளை சேகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 2,300 நிலையங்களை நிறுவுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.

அதற்கிணங்க, இலகுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி செலுத்துதல்கள் உட்பட இலத்திரனியல் என்ஐசியின் நன்மைகளை ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், இந்தியா இத் திட்டத்திற்கு ரூ. 10 பில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது என குறிப்பிட்டார்.

தரவு பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கு உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, உள்ளூர் தரவு விஞ்ஞான நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் ஆரம்ப உதவியின் பின்னர் தரவு உள்ளீடு இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here