இலங்கையில் கடந்த சில வருடங்களாகத் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், தோலில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.

தோலை ப்ளீச் செய்வதன் ஊடாக சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்களால் தோல் நேரடியாகப் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும், தோலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் முறையான சிகிச்சைகளைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது போன்ற அழகுசாதனப் பொருட்கள் பெரும்பாலும் இணையம் மூலம் விற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here