Saturday, April 25, 2026
No menu items!

வெள்ளை மாளிகை

ட்ரம்ப் கனவு நிறைவேற்றம்:வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் கனவு, வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை போல்ரூமாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் கருதப்படும் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, அந்த பகுதியை போல்ரூம் அமைக்க வேண்டும்...

எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்..!!

பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் (08) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் (BRICS) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது...

காசா இரத்தக் காடாக மாறும் வேளையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்–நெதன்யாகு பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், முற்றுகையிலிருக்கும் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை இருவரும் முன்னிலைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய படைகள் 60 பாலஸ்தீனர்களை கொன்றதாகவும், இந்த தாக்குதலுக்கு...

அமெரிக்காவின் வரி விதிப்பு தீர்மானம் ஒத்திவைப்பு!

ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்த அமெரிக்காவின் வரி விதிப்பு தீர்மானம், ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மைக் வால்ட்ஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நீக்கப்பட்டுள்ளார். அவர் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ, தற்காலிகமாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. மைக் வால்ட்ஸ், அமெரிக்க இராணுவத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்ற...

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு..!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் நடமாடிய நபரொருவர் மீது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்பைத் தாக்கத் திட்டமிட்டுக் குறித்த நபர் அங்குச் சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு...

அமெரிக்க ஜனாதிபதியின் விமர்சனம்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த...

எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் திரும்பப் பெற வேண்டும்; பொதுமக்கள் போராட்டம்!

அமெரிக்க அரச நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்தும்  மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று (17) வொஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் . வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ட்ரம்புக்கும் மஸ்க்கிற்கும் எதிராக குரல் எழுப்பியதோடு எலான் மஸ்க்கை உடனடியாக அரச துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும்...

நாடுகளுக்கான வரி விதிப்பு அமுல் – வெள்ளை மாளிகை அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு...

டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் பிரதமர்!

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதற்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அவர் "நம்பிக்கை உறவை" உருவாக்க விரும்புவதாக கூறினார். "எங்கள் இருதரப்பு உறவை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை மையமாகக் கொண்ட நேர்மையான விவாதங்கள் மூலம் நம்பிக்கையின் உறவை ஏற்படுத்த விரும்புகிறேன்.
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img