கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 780,011 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 27,520 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 220,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,230 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 201,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 192,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.








