காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (07.09) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஒரு கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் 3 தங்க பிஸ்கட் துண்டுகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை தங்க பிஸ்கட்டுகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here