தனமல்வில – வெல்லவாய வீதியின் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

தனமல்வில நோக்கி சென்ற வேனின் 18 வயது சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஆறு பேரில்  56 வயதுடைய தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் அவிசாவளை ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பின் புத்தளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் முதலில் தனமல்வில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், கவலைக்கிடமாக இருந்த 23, 35 மற்றும் 49 வயதுடைய மூவர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here