எல்ல வெல்லவாய பிரதான வீதியின் ரந்தெனிய பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வெல்லவாயவிலிருந்து எல்ல நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று, வெல்லவாயவிலிருந்து ரந்தெனிய நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்பதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








