தனியார் பேருந்து ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கம்பளை பொரலுமங்கட, சிஹின முருக்கு சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றபோதிலும் பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்து வீட்டின் மீது மோதியுள்ளதுடன், வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here