இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த விடயங்களுக்கான பேச்சுவார்த்தைகளை மேம்படுத்துவதற்கும், நீடித்த மற்றும் செழிப்பான பாதையை மேம்படுத்துவதற்கும் தங்களது தரப்பு உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்ச்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here