யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து  பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை  அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here