ஆசனம் மற்றும் பதவிகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய தரப்பினருடனேயே கூட்டிணைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.








