மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் 290 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் மானிப்பாய் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (3/20/2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு. G.J.குணதிலகவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.








