தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்புக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை மாலை கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவற்றோடு, வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான குழு ஒன்றும் கலந்து கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்திய எதிர்ப்பு வாதத்தை மாற்றிக் கொள்வதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையைப் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here