நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹேமா கமிட்டி குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த இவர் ஹேமா கமிட்டி மற்றும் தமிழ் சினிமா தொடர்பில் வினாக்கள் எழுப்பப்பட்ட போது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்,

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் குறித்து ஹேமா கமிட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று பல முன்னணி நடிகைகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் நடித்துள்ளேன். ஆனால், இதுவரை எனக்கு இதுபோன்ற ஒரு செயல் நடக்கவில்லை.

அதனால் ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி தமிழ் சினிமாவிற்கு தேவை இல்லை. ஒரு வேளை பெண்களுக்கு எதிராக தவறு நடந்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்று கூறியுள்ளார்.








