தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் இன்று (03.10.2024) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தானது ஆடை தொழிற்சாலைக்காக பணியாளர்களை ஏற்றி கிளிநொச்சி நோக்கி பயணித்த பேருந்தில் தலை கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரே வந்த பேருந்தில் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது வைத்தியர்கள் பார்வையிட்டு ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜேந்திரன் கௌதமன் வயது 45 வயது உடையவர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








