தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் வருடாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி.என். எம்.விக்ரமசிங்க எதிர்வரும் பெரும் போகத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மக்காச்சோளம், உளுந்து,பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பல வகையான தானியங்களின் வருடாந்த அறுவடை நாட்டின் தேவைக்கே போதுமானதாக இல்லை.

இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் அந்த தானியங்களை இறக்குமதி செய்வதற்கு பெருமளவு பணம் செலவிட வேண்டியுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டில் வருடாந்த சோளத் தேவை 06 மெற்றிக் தொன்களாக உள்ள நிலையில் 03 மெட்ரிக் தொன்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விரிவான திட்டத்துடன் இந்த பயிர்கள் பயிரிடப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here