கடிகமுவ – இஹல கோட்ட ரயில் நிலையத்தில் எரிபொருள் ரயில் மீது நேற்று (11.08) இரவு பாரிய மரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததால் மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் ரம்புக்கனை ரயில் நிலையத்திலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் கடுகன்னாவ ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.







