Exif_JPEG_420

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் திரு.சகாதேவன், மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பானமை இனத்தை சேபர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25. ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக் குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக  இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை ஏடுக்கப்படும் ஏனவும் அங்கு உரை நிகழ்த்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.

திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரைடால் திக்கம் வடிசாலையில் பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணி தலைவர் தலமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,  பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், யாழப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் பதிவாளருமான திரு.திருலிங்கநாதன், யாழ் மாவட்டத்தில் உள்ள ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாச தலைவர்கள்,  பொதுமுகாமையாளர், பிரதிநிதிகள் மற்றும் வலிகாமம்,  வடமராட்சி தென்மராட்சி, ஆகிய கொத்தணிகளின்  தலைவர்வர்கள், பொதுமுகாமையாளர்கள்,  நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து பனை தென்னை கூட்டுறவு  சங்கங்களினது தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், திக்கம் வரணி வடிசாலை தலைவர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here