முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த முறைப்பாடுகளின் படி மாத்திரம் திசர நாணயக்கார செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொகை 57,500,000 ரூபாவாகும்.
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பின்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக கம்பஹாவைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து திசர நாணயக்காரவ கடந்த டிசம்பர் 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.








