Thursday, July 9, 2026
No menu items!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு

E-9 விசா: இதுவரை 3,469 இலங்கை இளைஞர்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் தென்கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (HRD Korea) இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை 3,469 இலங்கை இளைஞர்கள் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சமீபத்தில், உற்பத்தித்துறை வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெற்ற 77 பேர் தென்கொரியாவுக்குப் பயணம் செய்துள்ளனர். E-9 விசா திட்டத்தின் கீழ்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் 567 நீதிமன்ற வழக்குகள் பதிவு..!!..!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தொழில் தேடுபவர்களை ஏமாற்றியதற்காகச் சந்தேக நபர்களிடமிருந்து ரூ.199.4 மில்லியனுக்கும் அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும் என்று வெளிநாட்டில் இருந்து இயங்கும் யூடியூப் சேனல் மூலம் பரவி வரும் கூற்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மறுத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயண ஆவணங்களின் நகலை SLBFE இன் எந்தவொரு கிளை அலுவலகத்திற்கும் அனுப்புமாறு இந்த காணொளி...

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

தென் கொரியாவில் E-8 பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தீவின் பல்வேறு பகுதிகளில் தனிநபர்களிடம் 3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் ஒருவர் குருநாகல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது தீவு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்ற உத்தரவுகளைத் தவிர்க்கும்...

தென் கொரியாவில் E-8 விசா வேலைகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் எந்த தகவலையும் சேகரிக்காது என்று தலைவர் கூறினார். தென் கொரியாவில்...

இலட்சக்கணக்கில் வெளிநாடு செல்லும் இலங்கையர்கள்..!

இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விதிமுறைகளை முறையாக...

வெளிநாட்டுக்கு வேலைக்காக பயணம் செய்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலை நோக்கங்களுக்காக ஓமனுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க, ராயல் ஓமன் காவல்துறையின் அறிவிப்பின் அடிப்படையில் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற முடியாது என்று SLBFE வலியுறுத்தியுள்ளது, மேலும் தனிநபர்கள் சுற்றுலா விசா...

கடவுச்சீட்டு தொடர்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, புலம்பெயர் தொழிலாளர்களின் இடம்பெயர்வை முடக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேல் புதிய கடவுச்சீட்டுகளுக்கான கோரிக்கை வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கொரிய மொழி புலமைத் தேர்வில்...

திசர நாணயக்காரவுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற புகார்கள்..!

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த முறைப்பாடுகளின் படி மாத்திரம் திசர நாணயக்கார செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொகை 57,500,000 ரூபாவாகும். வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களை...

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளை நாடும் இலங்கையர்கள்..!

2024ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டில் 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img