ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது.

கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் கையடக்கத் தொலைபேசி வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதன்போது, அங்கிருந்த யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

கையடக்கத் தொலைபேசிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வதால் அதன் பேட்டரி வெடிக்கும் அபாயம் உள்ளதாக கையடக்கத் தொலைபேசிகளை பழுதுபார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here