நாட்டில் ஏற்பட்ட கடந்த தித்வா சூறாவளி காரணமாக 150 தேசிய பாடசாலைகள் மற்றும் 07 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு 227 கோடி ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ.2,274,230,000 என அமைச்சின் பொறியியல் பிரிவால் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் நிதி அறிக்கைகளில் அடையாளம் காணுதல் அல்லது வெளிப்படுத்துதல் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறித்த கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டில் உள்ள பாடசாலைகள், தேசிய கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் போன்றவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான முக்கிய பொறுப்பு பொறியியல் கிளைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 2025 ஆம் ஆண்டில் 41 கட்டுமானங்களுக்காக ரூ.8,432,290,000 ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







