போகாவத்தை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட திம்புள்ளை மேற்பிரிவு தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதைக்கான செப்பனிடும் பணிகள் நேற்றையதினம்(6) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 2.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் ஊடாக சுமார் 500 குடும்பங்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் அரசாங்கத்தின் நுவரெலிய மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் ஊடாக அனுமதி பெறப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கொட்டகலை பிரதேச ஒருங்கிணைப்பாளர் குணசீலன், போகாவத்தை வட்டார அமைப்பாளர் யோகேந்திரன் மற்றும் நுவரெலிய மாவட்ட இளைஞர் சம்மேளத்தின் தலைவர் சுதர்ஷிகா, தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.








