மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற பின்னணி கொண்ட இலக்க தகடுகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தகடுகளின் சட்டபூர்வ தன்மையை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஓய்வு பெற்ற விமானப்படை மேஜர் ஜெனரல் துஷார பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து துஷார பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில், ஏனைய வாகனங்களுக்கு வழக்கம் போல வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இலக்க தகடுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்க தகடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 2026 ஜூன் 10 முதல் ஓகஸ்ட் 31 வரை பதிவு செய்யப்பட்ட 56,233 தகடுகளும், 2023 மற்றும் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 32,507 தகடுகளும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் தங்கள் இலக்க தகடுகளை நாரஹேன்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








