திருகோணமலை உட்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை வீதியில் இருந்து, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவணியாக ’பேச்சு வார்த்தை போதும் இனி நியமனத்தை வழங்கு’ உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தினை நேற்று (02.07)  திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது கிழக்கு ஆளுநர் செயலக முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் செயலகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here