மொரட்டுவை, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (11/04/2025) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களால் வீட்டினுள் எற்றப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்த போதும், தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here