துருக்கி தலைநகர் அங்காராவிற்கு அருகிலுள்ள விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குர்திஷ் கிளர்ச்சிக் குழுவான பி.கே.கே.வினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.

அதேநேரம் வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகத் துருக்கியின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

துருக்கி, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் பி.கே.கே. குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here