யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது ஆணொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here