Wednesday, July 22, 2026
No menu items!

டிப்பர்

தெலுங்கானாவில் பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து- 20 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், பேருந்தொன்றும் டிப்பர் ரக லாரியும் மோதியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. நேரில் கண்ட சாட்சிகளின் தகவலின்படி, டிப்பர் வாகனம்...

பரந்தன் பகுதியில் டிப்பர் மோதியதில் பெண் உயிரிழப்பு – சாரதி மீது பொதுமக்கள் தாக்குதல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று 31.07.2025 பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது யாதெனில் கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி...

யாழில் கோர விபத்து –  குடும்பஸ்தர் பலி..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 8:50 மணியளவில் இடம் பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், டிப்பர் மீது மோதியதில்...

வீதியோரமாக சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர் – பலியான உயிர்..!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) என்ற மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 33 வயதுடைய டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால்...

துவிச்சக்கரவண்டி மீது டிப்பர் மோதியதில் ஒருவர் பலி!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது ஆணொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு டிப்பர் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்கள்!

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன அவர்களின் தலைமையில்   பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்றையதினம் மூன்று டிப்பர் வாகனங்களும் நேற்றுமுந்தினம் இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து...

நள்ளிரவில் டிப்பர் திருடியவர்கள் தப்பி ஓட்டம் !

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி 1.30 மணி அளவில் 15க்கு மேற்பட்ட ஆயுத குழுக்கள் வீட்டு உரிமையாளர் இல்லாத சமயம் வீட்டில் இருந்த பெண்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். பின் வீட்டின் முன் மதில் மற்றும்கேற்று  கதவுகளை உடைத்துக் கொண்டு வீட்டின் உட்பகுதியில் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர்...

மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!

மணல் ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நிறுத்தாமல் பயணித்த நிலையில் குடமுருட்டி பகுதியில் வைத்து பொலிசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலப் பகுதியில்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img