கெக்கிராவ முதுபெருமகம ஏரிக்கரைக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சில ஆடைகள் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கேகாலை, துந்தோட்ட அலவல பிரதேசத்தை சேர்ந்த மதுசங்க அமரசிங்க என்ற 25 வயதுடைய திருமணமானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here