தென்கொரியாவில் பயணிகள் விமானமொன்று தீப்பிடித்ததில் 176 பேர் அவசரஅவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தென்கொரியாவின் ஹிம்ஹாய விமானநிலையத்தில் தென்கொரியாவின் புசான் பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இதனை தொடர்ந்து 169 பயணிகளும் ஏழு விமானப்பணியாளர்களும் உடனடியாக விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

விமானத்திற்குள் தீபரவத்தொடங்கியதும் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக  அழைக்கப்பட்டனர் விமானத்தின் பின்பகுதியிலேயே முதலில் தீப்பிடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானத்தின் பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here