தென்னாப்பிரிக்காவுக்கான ‘Miss South Africa 2024’ அழகிப் போட்டியில் கேட்டல் குறைபாடுடைய 28 வயதான Mia le Roux எனும் பெண் வாகை சூடியுள்ளார்.
இப்பட்டத்தை வென்றுள்ள கேட்டல் குறைபாடுடைய முதல் பெண்மணியும் ஆவார்.
மேலும் அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
தனது வெற்றி, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தன்னைப் போன்றோர் தங்களின் மிகப் பெரிய கனவுகளை நனவாக்க ஊக்குவிக்கும் சந்தர்ப்பமாக அமையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், நிதி நிலவரத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளர்கள் ஆகியோருக்குத் தான் உதவ எண்ணம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒரு வயதில் காது கேட்காமல் போன இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ‘கொஹ்லியர் இம்பிளான்ட்’ சிகிச்சை மூலம் ஒலிகளை தன்னால் அறிய முடிவதாகவும், தான் பேசத் தொடங்க, ஈராண்டுகளுக்குப் பேச்சு சிகிச்சை பெறவேண்டியிருந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.







