இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இன்று (11) 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
மேலும் வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இன்று மதியம் 12:58 மணியளவில் 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு வாரங்களுக்குள் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வு இதுவாகும்.








