இன்று (20) காலை தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதிமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெதிமால விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கடவத்த வீதியில் களுபோவில திசையிலிருந்து தெஹிவளை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








