மக்கள் வங்கி தர்கா நகர் சேவை மையம் அண்மையில் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.

426, வெலிப்பன்ன வீதி, தர்கா நகர் என்ற முகவரியில் அமைந்துள்ள மக்கள் வங்கியின் அளுத்கமை கிளையுடன் இணைந்ததாக இச்சேவை மையம் அமைந்துள்ளதுடன், அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான சேவைகளை வழங்கவும்  தயாராகவுள்ளது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் நளின் பத்திரணகே, களுத்துறை பிராந்திய முகாமையாளர் மொனிகா சூரியப்பெரும, உதவி பிராந்திய முகாமையாளர் கபில விதானகே, உதவிப் பிராந்திய முகாமையாளர்களான றோகினி காரியவசம், சாரங்கா ஸ்ரீ விமுக்தி, புதிய கிளை முகாமையாளர் சமீர ரூபசிறி, சேவை மைய முகாமையாளர் சச்சித்த பெரேரா மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, ரூபா 3 டிரில்லியனுக்கும் மேற்பட்ட திரட்டிய சொத்துக்களையும், ரூபா 2.5 டிரில்லியனுக்கும் மேற்பட்ட திரட்டிய வைப்புக்களையும் கொண்டுள்ளது.

நாடெங்கிலும் பரந்துள்ள 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களின் வலையமைப்புடன், 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here