தேசபந்து தென்னகோனின் காவல்துறை கடமை மற்றும் அதிகாரங்கள் நடைமுறைப்படுத்துவதை தடுத்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த இடையீட்டு மனுவை பரிசீலிக்க போதுமான நியாயமான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படாததால், அதனை நிராகரிப்பதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

பெல்லன்வில தம்மரத்தன தேரர், அகலகட சிறிசுமன தேரர் மற்றும் கொட்டபிட்டியே ராஹூல தேரர் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here