எக்ஸ்.இ.சி (XEC) எனும் புதிய வகை கொவிட் தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கொவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரித்தானியா, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர் காலத்தில் வேகமாகப் பரவத் தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்தத் திரிபால் மனிதர்களுக்குத் தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்பத் தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எக்ஸ்.இ.சி XEC எனும் இந்தப் புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரோன் திரிபிலிருந்து உருவாகியுள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here