அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள பெட்டகங்களில் வாக்குச் சீட்டுகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024 பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 17,140,354 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.







