தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்விஞ்ஞாபனம் ஐந்து வாரங்ளிற்கானது இல்லை ஐந்து வருடங்களிற்கானது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சில அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஐந்து வருடங்களிற்காகவே சமர்ப்பித்தது ஐந்து மாதங்களிற்காக இல்லை என தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடகாலத்தில் பூர்த்தி செய்வதற்காகவே அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்தது என தெரிவித்துள்ள அவர் சஜித்பிரேமதாச போன்ற சில அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுப்பது போல ஐந்து வாரங்களிற்குள் அவற்றை நிறைவேற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மேலும் தீர்மானங்களை எடுக்க வேண்டும்,ஐந்து வருடங்களிற்குள் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த விடயங்களை ஐந்து வருடங்களிற்குள் பூர்த்தி செய்ய முடியாது, நாங்கள் இன்னமும் அரசாங்கத்தை கூட அமைக்கவில்லை,கடந்த ஐந்து வாரங்களில் மிக முக்கியமான தீர்மானங்களை மாத்திரம் எடுத்தோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறிய சூழ்நிலையில் மூன்று அமைச்சர்கள் நாட்டை நிர்வகிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் புதிய பாதையில் பயணிக்கின்றோம் என்பதை காண்பித்துள்ளோம்,நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதற்கு ஊழல் அரசியல் கலாச்சாரம் ஊழல் போன்றவையே காரணம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here