தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு பணியாற்றுவதை விடவும், உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுவதிலேயே சிறந்து விளங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் பணியாற்றுவதில் சிறந்தவர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கருதினர்.
ஆனால், அவர்கள் பணியாற்றுவதில் சிறந்தவர்கள் அல்ல, பொய் கூறுவதிலேயே சிறந்தவர்களாக இருக்கின்றனர்.
மக்களை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள்.
பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களின் போது தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குரல் கொடுக்கவில்லை.
இன்று பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக எமது நாட்டின் இஸ்லாமிய இளைஞர் ஒருவரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதற்கு ஜனாதிபதி கையெழுத்திடும் அளவு தரம் தாழ்ந்துவிட்டார் என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
ஆகவே, இவ்வாறான தரம் தாழ்ந்த அரசியல் கலாசாரத்திற்கு அடிபணிய வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.








