தொடருந்து இலத்திரனியல் பயணச்சீட்டினை அதிக விலைக்கு விற்பனை செய்த முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் கண்டி குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கண்டியில் இருந்து பதுளை வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் தொடருந்துக்கு வழங்கப்படும் 4,000 ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பயணச்சீட்டினை பிரித்தானியப் பெண் பிரஜைகள் இருவருக்கு 27,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சாரதி ஒருவர் குறித்த பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்துள்ளதுடன், அதனை முச்சக்கர வண்டியின் சாரதியின் ஊடாக பிரித்தானிய பெண் பிரஜைகளுக்கு விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு இலத்திரனியல் தொடருந்து பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் செய்தி சேவையொன்று முதன்முறையாக வெளிப்படுத்தியது.
இதற்கமைய அவ்வாறான மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








