அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவரும், இரண்டு  சிறுமிகளும் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் அவர்களை மீட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஆபத்தான நிலையில் இருந்த 54 வயதான உக்ரைன் ஆண், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்த இரு சிறுமிகளும் 13 மற்றும் 17 வயதுடைய உக்ரேனியர்கள்.

இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here