மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்ட பிரவுன்ஸ்விக் பிரிவில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 9 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவலின் போது நான்குதோட்ட மக்கள் பகுதிகளில் உள்ள கூறைகள் எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
ஏனைய 12 குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தோட்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸார் நிறுத்தி உள்ளனர்.
16 குடியிருப்புக்களைக் கொண்ட தொடர் குடியிருப்பில் முதல் நான்கு குடியிருப்பு பகுதிகளில் உள்ள கூறைகள் சேதமடைந்துள்ளன.
அந்த 16 குடியிருப்புகளில் இருந்த மக்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.








